தம்பரமென்றிரங்கித் தளராமனந்தந்தருளால்
உம்பர்தொழுந் திருமால் உகந்தேற்கு முபாயமொன்றால்
நம்பிறவித் துயர்மாற்றிய ஞானப்பெருந் தகவோர்
சம்பிரதாயமொன்றிச் சதிர்க்குந்நெறி சார்ந்தனமே. 1
𑌸𑌦𑌾𑌚𑌾𑌰𑍍𑌯 𑌸𑌮𑍍𑌪𑍍𑌰𑌦𑌾𑌯த்தாலே 𑌅𑌧𑍍𑌯𑌾𑌤𑍍𑌮𑌶𑌾𑌸𑍍𑌤𑍍𑌰-𑌅𑌰𑍍𑌥𑌵𑌿𑌶𑍇𑌷-𑌨𑌿𑌰𑍍𑌣𑌯ம் பண்ணவேண்டுமென்னுமிடம் 𑌉𑌪𑌨𑌿𑌷த்துக்களிலும் 𑌉𑌪𑌬𑍃𑌮𑍍𑌹𑌣ங்களிலும் 𑌪𑍍𑌰𑌸𑌿𑌦𑍍𑌧𑌮𑍍. 𑌶𑌾𑌸𑍍𑌤𑍍𑌰𑌾𑌰𑍍𑌥𑌨𑌿𑌰𑍂𑌪𑌣ம் பண்ணுமிடத்தில் 𑌶𑌕𑍍𑌤𑌿யில்லாதவர்களுக்கு 𑌉𑌪𑌦𑍇𑌶𑌾𑌤𑍍 𑌹𑌰𑌿𑌂 𑌬𑍁𑌦𑍍𑌧𑍍𑌵𑌾 என்கிறபடியே 𑌶𑌾𑌸𑍍𑌤𑍍𑌰𑌜𑍍𑌞𑌸𑌮𑍍𑌪𑍍𑌰𑌦𑌾𑌯𑌮𑌾𑌤𑍍𑌰மும் 𑌅𑌪𑍇𑌕𑍍𑌷𑌿𑌤-𑌅𑌰𑍍𑌥𑌨𑌿𑌰𑍍𑌣𑌾𑌯𑌕மாம். 𑌸𑌤𑍍-𑌸𑌮𑍍𑌪𑍍𑌰𑌦𑌾𑌯-𑌰𑌹𑌿𑌤மான 𑌶𑌾𑌸𑍍𑌤𑍍𑌰த்தால் 𑌅𑌰𑍍𑌥-𑌨𑌿𑌰𑍍𑌣𑌯ம் 𑌦𑍁𑌷𑍍𑌕𑌰𑌮𑍍. 𑌸𑍁𑌕𑌰ந்தானாகிலும் 𑌉𑌪𑌯𑍁𑌕𑍍𑌤மாகாது.
𑌸𑌤𑍍𑌸𑌮𑍍𑌪𑍍𑌰𑌦𑌾𑌯ம் – 𑌸𑌦𑌸𑍍𑌯ம் – 𑌰𑌹𑌸𑍍𑌯ம் – விளக்கம்
𑌅𑌤𑍍𑌯𑌨𑍍𑌤-𑌅𑌤𑍀𑌨𑍍𑌦𑍍𑌰𑌿𑌯-𑌵𑌿𑌷𑌯த்தில் 𑌶𑌾𑌸𑍍𑌤𑍍𑌰-𑌮𑍂𑌲மல்லாத 𑌸𑌮𑍍𑌪𑍍𑌰𑌦𑌾𑌯மும் 𑌸𑌮𑍍𑌪𑍍𑌰𑌤𑌿𑌪𑌨𑍍𑌨-𑌶𑌾𑌸𑍍𑌤𑍍𑌰-𑌵𑌿𑌰𑍁𑌦𑍍𑌧மான 𑌸𑌮𑍍𑌪𑍍𑌰𑌦𑌾𑌯மும் 𑌭𑍍𑌰𑌮-𑌵𑌿𑌪𑍍𑌰𑌲𑌮𑍍𑌬-𑌸𑌮𑍍𑌭𑌾𑌵𑌨𑍈யுண்டாகையால் 𑌬𑌾𑌹𑍍𑌯-𑌤𑍁𑌲𑍍𑌯மாகையாலே 𑌅𑌵𑌿𑌶𑍍𑌵𑌸𑌨𑍀𑌯ம். 𑌪𑌰𑌸𑍍𑌪𑌰-𑌵𑌿𑌰𑍁𑌦𑍍𑌧மாக 𑌸𑌦𑌸𑍍𑌯மும் 𑌰𑌹𑌸𑍍𑌯மும் என்று சொல்லுமவையிரண்டும் 𑌸𑍍𑌵-𑌵𑌾𑌕𑍍𑌯த்தாலே 𑌬𑌾𑌧𑌿𑌤ங்களாம். திரளிலே சொல்லுமவை 𑌸𑌦𑌸𑍍𑌯ம். சில 𑌅𑌰𑍍𑌥ங்களை 𑌏𑌕𑌾𑌨𑍍𑌤த்தில் சொல்ல 𑌵𑌿𑌧𑌿க்கையாலே அவற்றை 𑌰𑌹𑌸𑍍𑌯மென்கிறது. 𑌪𑍍𑌰𑌜𑌾𑌪𑌤𑌿𑌵𑌾𑌕𑍍𑌯ம் முற்பட 𑌅𑌸𑍁𑌰𑍇𑌨𑍍𑌦𑍍𑌰னான 𑌵𑌿𑌰𑍋𑌚𑌨னை 𑌮𑍋𑌹𑌿ப்பிக்கைக்காகச் சொல்லப்பட்டு, பிற்பட 𑌦𑍇𑌵𑍇𑌨𑍍𑌦𑍍𑌰னைப் 𑌪𑌰𑍍𑌵𑌕𑍍𑌰𑌮த்தாலே 𑌪𑌰𑌿𑌶𑍁𑌦𑍍𑌧-𑌆𑌤𑍍𑌮𑌵𑌿𑌷𑌯த்திலே 𑌪𑍍𑌰𑌤𑌿𑌷𑍍𑌠𑌿𑌤-𑌬𑍁𑌦𑍍𑌧𑌿யாக்குகிறது. 𑌉𑌪𑌕𑍋𑌸𑌲-𑌵𑍈𑌶𑍍𑌵𑌾𑌨𑌰𑌾𑌦𑌿 𑌵𑌿𑌦𑍍𑌯𑍈களிலே முற்பட 𑌵𑍇𑌦𑍍𑌯 𑌉𑌪𑌾𑌦𑍇𑌯ங்களைப் பற்ற 𑌏𑌕𑌦𑍇𑌶-𑌉𑌪𑌦𑍇𑌶ம் 𑌕𑍍𑌰𑌮𑍇𑌣-𑌶𑍇𑌷𑌪𑍂𑌰𑌣𑌾𑌰𑍍𑌥ம். 𑌸𑌰𑍍𑌵𑍇𑌶𑍍𑌵𑌰ன் தானும் தான் 𑌉𑌪𑌦𑍇𑌶𑌿த்த 𑌜𑍍𑌞𑌾𑌨த்தைப் பின்னையும் 𑌤𑌦𑍍𑌵𑌿𑌦𑍍𑌧𑌿 𑌪𑍍𑌰𑌣𑌿𑌪𑌾𑌤𑍇𑌨 𑌪𑌰𑌿𑌪𑍍𑌰𑌶𑍍𑌨𑍇𑌨 𑌸𑍇𑌵𑌯𑌾 என்று பல 𑌜𑍍𑌞𑌾𑌨𑌿கள் பக்கலிலே கேட்க 𑌵𑌿𑌧𑌿த்தானிறே. இப்படிகளால் 𑌸𑌂𑌪𑍍𑌰𑌤𑌿𑌪𑌨𑍍𑌨-𑌶𑌾𑌸𑍍𑌤𑍍𑌰-𑌵𑌿𑌰𑍋𑌧மின்றிக்கே 𑌶𑌾𑌸𑍍𑌤𑍍𑌰 𑌮𑍂𑌲𑌤𑍍𑌵-𑌸𑌂𑌪𑍍𑌰𑌤𑌿𑌪𑌤𑍍𑌤𑌿யுண்டான 𑌸𑌮𑍍𑌪𑍍𑌰𑌦𑌾𑌯மே 𑌉𑌪𑌜𑍀𑌵𑍍𑌯ம்.
𑌉𑌪𑌨𑌿𑌷𑌤𑍍-𑌪𑍍𑌰𑌮𑌾𑌣ங்களுள் முரண்பாடின்மையும் 𑌤𑌤𑍍𑌤𑍍𑌵-𑌅𑌨𑍁𑌷𑍍𑌠𑌾𑌨-𑌵𑌿𑌷𑌯ங்களில் முரண்பாடின்மையை 𑌜𑍍𑌞𑌾𑌨𑌿களிடம் கேட்டுணர்தலும்
இப்படிப்பட்ட 𑌸𑌤𑍍𑌸𑌮𑍍𑌪𑍍𑌰𑌦𑌾𑌯த்தில் தோற்றும் 𑌵𑌿𑌰𑍋𑌧ம் 𑌤𑌤𑍍𑌵𑌵𑌿𑌷𑌯மாகில் 𑌤𑌾𑌤𑍍𑌪𑌰𑍍𑌯𑌭𑍇𑌦த்தாலே 𑌵𑌿𑌰𑍋𑌧𑌶𑌾𑌨𑍍𑌤𑌿யுண்டாம், 𑌅𑌨𑍁𑌷𑍍𑌠𑌾𑌨𑌵𑌿𑌷𑌯மாகில் அவ்வோ 𑌅𑌧𑌿𑌕𑌾𑌰𑌿க்கு 𑌅𑌨𑍁𑌗𑍁𑌣மாக 𑌵𑍍𑌯𑌵𑌸𑍍𑌥𑌿𑌤-𑌅𑌵𑍍𑌯𑌵𑌸𑍍𑌥𑌿𑌤-𑌪𑍍𑌰𑌕𑍍𑌰𑌿𑌯𑍈யாலே 𑌵𑌿𑌕𑌲𑍍𑌪மாம். 𑌨𑍍𑌯𑌾𑌸-𑌉𑌪𑌾𑌸𑌨ங்களிலே 𑌅𑌧𑌿𑌕𑌾𑌰𑌿-𑌭𑍇𑌦த்தை யிட்டு 𑌵𑍍𑌯𑌵𑌸𑍍𑌥𑌿𑌤-𑌵𑌿𑌕𑌲𑍍𑌪மென்று பார்க்கிலும் 𑌫𑌲𑌸𑌾𑌮𑍍𑌯த்தையிட்டுத் 𑌤𑍁𑌲𑍍𑌯𑌵𑌿𑌕𑌲𑍍𑌪மென்று பார்க்கிலும் 𑌵𑌿𑌰𑍋𑌧மில்லை.
முன் 𑌯𑍁𑌗த்தில் 𑌵𑍇𑌦𑌾𑌨𑍍𑌤-𑌸𑌮𑍍𑌪𑍍𑌰𑌦𑌾𑌯ம் வருமுறையும் 𑌕𑌲𑌿𑌯𑍁𑌗த்தில் நம்மாழ்வார் 𑌸𑌮𑍍𑌪𑍍𑌰𑌦𑌾𑌯-𑌪𑍍𑌰𑌵𑌰𑍍𑌤𑍍𑌤𑌕ராதலும்
𑌸𑌰𑍍𑌵-𑌲𑍋𑌕-𑌹𑌿𑌤மான இந்த 𑌅𑌧𑍍𑌯𑌾𑌤𑍍𑌮-𑌶𑌾𑌸𑍍𑌤𑍍𑌰-𑌸𑌮𑍍𑌪𑍍𑌰𑌦𑌾𑌯த்திற்கு 𑌪𑍍𑌰𑌥𑌮-𑌪𑍍𑌰𑌵𑌰𑍍𑌤𑌕ன் 𑌸𑌰𑍍𑌵𑍇𑌶𑍍𑌵𑌰ன். மற்றுள்ளா ரெல்லாரும் அவன் தானேயாதல் 𑌚𑍇𑌤𑌨𑌾𑌨𑍍𑌤𑌰-𑌮𑍁𑌖த்தாலேயாதல் மயர்வற மதிநலமருள, 𑌪𑍍𑌰𑌵𑌰𑍍𑌤𑌿ப்பிக்கிறவர்கள்.
இப்படி 𑌅𑌨𑌸𑍂𑌯𑌾𑌦𑌿-𑌗𑍁𑌣-𑌯𑍁𑌕𑍍𑌤ராய், 𑌪𑍍𑌰𑌣𑌿𑌪𑌤𑍍𑌯𑌾𑌭𑌿𑌵𑌾𑌦𑍍𑌯 𑌚 𑌇𑌤𑍍𑌯𑌾𑌦𑌿களிற்படியே 𑌸𑌂𑌯𑌕𑍍-𑌉𑌪𑌸𑌨𑍍𑌨ரான 𑌅𑌧𑌿𑌕𑌾𑌰𑌿ளைப் பற்ற, 𑌯𑌥𑌾𑌰𑍍𑌥𑌦𑌰𑍍𑌶𑌿களாய் 𑌯𑌥𑌾𑌦𑍃𑌷𑍍𑌟-𑌅𑌰𑍍𑌥𑌵𑌾𑌦𑌿களான 𑌵𑍍𑌯𑌾𑌸-𑌬𑍋𑌧𑌾𑌯𑌨𑌾𑌦𑌿களாலே 𑌯𑌥𑌾𑌧𑌿𑌕𑌾𑌰𑌮𑍍 𑌪𑍍𑌰𑌵𑌰𑍍𑌤𑌿𑌤மான 𑌵𑍇𑌦𑌾𑌨𑍍𑌤-𑌸𑌮𑍍𑌪𑍍𑌰𑌦𑌾𑌯த்திற்கு இந்த 𑌯𑍁𑌗𑌾𑌰𑌮𑍍𑌭த்திலே 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌨𑌨𑍍𑌦𑍍𑌯𑌾𑌦𑌿களுக்குப் பின்பு நம்மாழ்வார் 𑌪𑍍𑌰𑌵𑌰𑍍𑌤𑌕ரானார். 𑌪𑍍𑌰𑌾𑌪𑍍𑌯𑌂 𑌜𑍍𑌞𑌾𑌨𑌂 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮𑌣𑌾𑌤𑍍 𑌕𑍍𑌷𑌤𑍍𑌰𑌿𑌯𑌾𑌦𑍍𑌵𑌾 𑌵𑍈𑌶𑍍𑌯𑌾𑌤𑍍 𑌶𑍂𑌦𑍍𑌰𑌾𑌦𑍍𑌵𑌾𑌽𑌪𑌿 𑌨𑍀𑌚𑌾𑌦𑌭𑍀𑌕𑍍𑌷𑍍𑌣𑌮𑍍 𑌇𑌤𑍍𑌯𑌾𑌦𑌿 𑌪𑍍𑌰𑌮𑌾𑌣-𑌬𑌲த்தாலே மிக்க வேதியர் வேதத்தினுட்பொருள் நிற்கப் பாடி என்னெஞ்சுள் நிறுத்தினான் என்கிறது 𑌉𑌪𑌪𑌨𑍍𑌨ம். 𑌵𑍇𑌦𑌾𑌨𑍍𑌤-𑌅𑌰𑍍𑌥-𑌵𑍈𑌶𑌦𑍍𑌯-𑌹𑍇𑌤𑍁வாகையாலே 𑌭𑌾𑌷𑌾𑌨𑍍𑌤𑌰மும் 𑌉𑌪𑌜𑍀𑌵𑍍𑌯ம். 𑌧𑌰𑍍𑌮-𑌵𑍍𑌯𑌾𑌧-𑌤𑍁𑌲𑌾𑌧𑌾𑌰𑌾𑌦𑌿-𑌵𑍃𑌤𑍍𑌤𑌾𑌨𑍍𑌤ங்களையும் இங்கே 𑌅𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌿ப்பது. 𑌶𑍂𑌦𑍍𑌰𑌯𑍋𑌨𑌾𑌵𑌹𑌂 𑌜𑌾𑌤𑍋 𑌨𑌾𑌤𑍋𑌽𑌨𑍍𑌯𑌦𑍍𑌵𑌕𑍍𑌤𑍁𑌮𑍁𑌤𑍍𑌸𑌹𑍇
என்கிறது 𑌵𑌿𑌷𑌯-𑌭𑍇𑌦த்தாலே 𑌪𑌰𑌿𑌹𑍃𑌤ம். மதுரகவி முதலான 𑌸𑌮𑍍𑌪𑍍𑌰𑌦𑌾𑌯- 𑌪𑌰𑌮𑍍𑌪𑌰𑍈யாலும் 𑌪𑍍𑌰𑌾𑌦𑍁𑌰𑍍𑌭𑌾𑌵-𑌵𑌿𑌶𑍇𑌷த்தாலும் 𑌨𑌾𑌥𑌮𑍁𑌨𑌿களுக்கு ஆழ்வார் 𑌆𑌚𑌾𑌰𑍍𑌯ரானார். இவரை 𑌪𑍍𑌰𑌪𑌨𑍍𑌨-𑌸𑌨𑍍𑌤𑌾𑌨-𑌕𑍂𑌟𑌸𑍍𑌥𑌤𑍈யாலே ஆளவந்தார் 𑌆𑌦𑍍𑌯𑌸𑍍𑌯 𑌨𑌃 𑌕𑍁𑌲𑌪𑌤𑍇𑌃 என்றருளிச் செய்தார்.
𑌨𑌾𑌥𑌮𑍁𑌨𑌿கள் தம்முடைய திருப்பேரனாரான ஆளவந்தாருக்குத் தாம் 𑌉𑌪𑌦𑍇𑌶𑌿யாதே தம்முடைய 𑌶𑌿𑌷𑍍𑌯-𑌪𑍍𑌰𑌶𑌿𑌷𑍍𑌯ர்களை இவருக்கு 𑌆𑌕𑌾𑌙𑍍𑌕𑍍𑌷𑍈 பிறந்தபோது 𑌉𑌪𑌦𑍇𑌶𑌿யுங்களென்று 𑌆𑌜𑍍𑌞𑌾𑌪𑌿த்தது 𑌗𑍁𑌰𑍁-𑌪𑍁𑌤𑍍𑌰-𑌪𑍗𑌤𑍍𑌰𑌾𑌦𑌿களும் 𑌵𑌿𑌦𑍍𑌯𑌾𑌪𑍍𑌰𑌦𑌾𑌨த்திற்கு 𑌪𑍍𑌰𑌶𑌸𑍍𑌤-𑌪𑌾𑌤𑍍𑌰ங்களென்றும், 𑌜𑍍𑌞𑌾𑌨-𑌸𑌨𑍍𑌤𑌤𑌿யிலே முற்பட்டவர்களும் 𑌗𑍁𑌰𑍁க்களாக 𑌆𑌦𑌰𑌣𑍀𑌯ரென்றும், 𑌆𑌕𑌾𑌙𑍍𑌕𑍍𑌷𑍈யின்றி யிருக்கச் செய்தே சொன்னால் 𑌶𑌿𑌷𑍍𑌯𑌬𑍁𑌦𑍍𑌧𑌿யில் 𑌅𑌰𑍍𑌥ம் 𑌪𑍍𑌰𑌤𑌿𑌷𑍍𑌠𑌿𑌤மாகாதென்றும் தெளிவித்தபடி.
மணக்கால்நம்பி ஆளவந்தாருக்கு நெடுநாள் பச்சையிட்டு ஒரு விரகாலே 𑌆𑌕𑌾𑌙𑍍𑌕𑍍𑌷𑍈யுண்டாக்கி 𑌉𑌪𑌦𑍇𑌶𑌿த்தது, 𑌆𑌚𑌾𑌰𑍍𑌯-𑌕𑍁𑌲த்திற்குத் தாமொரு 𑌕𑌿𑌞𑍍𑌚𑌿𑌤𑍍𑌕𑌾𑌰𑌂 பண்ணுகையிலும் 𑌆𑌚𑌾𑌰𑍍𑌯-𑌨𑌿𑌯𑍋𑌗த்தைக் கடுகத் தலைக்கட்டுகையிலும் உண்டான 𑌤𑍍𑌵𑌰𑍈யாலும் 𑌚𑌿𑌰𑌕𑌾𑌲-𑌪𑌰𑍀𑌕𑍍𑌷𑌾𑌦𑌿கள் வேண்டாதபடி 𑌬𑍋𑌧𑌨𑌂 𑌚 𑌮𑍁𑌹𑍁𑌃 𑌕𑍍𑌰𑌮𑌾𑌤𑍍 என்கிற 𑌯𑍁𑌗𑌧𑌰𑍍𑌮-𑌅𑌨𑍁𑌸𑌾𑌰த்தாலும் 𑌉𑌪𑌪𑌨𑍍𑌨ம்.
ஆளவந்தார் தாம் 𑌨𑌾𑌥𑌮𑍁𑌨𑌿களை முன்னிட்டு 𑌸𑍍𑌤𑍋𑌤𑍍𑌰ம் பண்ணிற்றும் 𑌶𑌰𑌣ம் புக்கதுவும் தம்முடைய 𑌆𑌚𑌾𑌰𑍍𑌯னுக்கு இது 𑌪𑍍𑌰𑌿𑌯𑌤𑌮மென்றும் தமக்கு 𑌆𑌚𑌾𑌰𑍍𑌯𑌵𑌤𑍍𑌤𑍈 முதலான 𑌸𑌮𑍍𑌪𑌤𑍍துக்களுக்கும் அடி 𑌨𑌾𑌥𑌮𑍁𑌨𑌿-𑌵𑌂𑌶த்தில் பிறவியென்றும் தோற்றுகைக்காகவும், 𑌆𑌚𑌾𑌰𑍍𑌯- 𑌵𑌿𑌷𑌯த்திற் போலே 𑌪𑍍𑌰𑌾𑌚𑌾𑌰𑍍𑌯𑌾𑌦𑌿-𑌵𑌿𑌷𑌯த்திலும் 𑌕𑍃𑌤𑌜𑍍𑌞𑌤𑌾𑌦𑌿கள் வேண்டுமென்கைக்காகவும், 𑌆𑌚𑌾𑌰𑍍𑌯𑌪𑌙𑍍𑌕𑍍𑌤𑌿யில் சிலரை 𑌗𑍍𑌰𑌨𑍍𑌥ங்களிலே 𑌵𑍍𑌯𑌪𑌦𑍇𑌶𑌿த்து அவர்களையும் மற்றுமுள்ளவர்களையும் 𑌅𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌿ப்பர்கள்.
ஆளவந்தாருடைய 𑌨𑌿𑌯𑍋𑌗த்தாலே 𑌶𑍍𑌰𑍀𑌭𑌾𑌷𑍍𑌯𑌕𑌾𑌰ரை 𑌅𑌙𑍍𑌗𑍀𑌕𑌰𑌿த்த 𑌪𑍂𑌰𑍍𑌣ரான பெரியநம்பி, அவரைத் தமக்கு 𑌸𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌚𑌾𑌰𑌿களான திருக்கோட்டியூர்நம்பி பக்கலிலே 𑌅𑌰𑍍𑌥𑌶𑌿𑌕𑍍𑌷𑍈 பண்ணவும், திருமாலையாண்டான் பக்கலிலே திருவாய்மொழி கேட்கவும், ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் பக்கலிலே நல்வார்த்தை கேட்கவும் 𑌨𑌿𑌯𑍋𑌗𑌿த்ததும், 𑌬𑌹𑍁𑌭𑍍𑌯𑌃 𑌶𑍍𑌰𑍋𑌤𑌵𑍍𑌯𑌂 𑌬𑌹𑍁𑌧𑌾 𑌶𑍍𑌰𑍋𑌤𑌵𑍍𑌯𑌮𑍍, 𑌜𑍍𑌞𑌾𑌨𑌵𑍃𑌦𑍍𑌧𑌾 𑌮𑌯𑌾 𑌰𑌾𑌜𑌨𑍍 𑌬𑌹𑌵𑌃 𑌪𑌰𑍍𑌯𑍁𑌪𑌾𑌸𑌿𑌤𑌾𑌃 𑌇𑌤𑍍𑌯𑌾𑌦𑌿களையும், 𑌶𑍁𑌕𑌾𑌦𑌿-𑌵𑍃𑌤𑍍𑌤𑌾𑌨𑍍𑌤ங்களையும் பார்த்து 𑌶𑌿𑌷𑍍𑌯𑌭𑍂𑌤ரை 𑌬𑌹𑍁-𑌮𑍁𑌖மாகத் திருத்த வேண்டுமென்கிற 𑌅𑌭𑌿𑌸𑌂𑌧𑌿யாலே 𑌉𑌪𑌪𑌨𑍍𑌨𑌤𑌮ம். இப்படி 𑌆𑌚𑌾𑌰𑍍𑌯-𑌅𑌭𑌿𑌮𑌤-𑌵𑌿𑌷𑌯த்தில் 𑌆𑌚𑌾𑌰𑍍𑌯-𑌅𑌨𑍁𑌜𑍍𑌞𑍈யாலே 𑌅𑌪𑍇𑌕𑍍𑌷𑌿𑌤-𑌜𑍍𑌞𑌾𑌨-𑌉𑌪𑌜𑍀𑌵𑌨ம் பண்ணுவது 𑌶𑌾𑌸𑍍𑌤𑍍𑌰𑌾𑌰𑍍𑌥மென்னுமிடம் 𑌅𑌨𑍍𑌤𑌿𑌮-𑌦𑌶𑌾𑌵𑌧𑌿யாக 𑌅𑌤𑍍𑌯𑌨𑍍𑌤-𑌅𑌵𑌹𑌿𑌤ராய்க் கொண்டு 𑌸𑌦𑌾𑌚𑌾𑌰-𑌅𑌨𑍁𑌪𑌾𑌲𑌨ம் பண்ணின 𑌶𑍍𑌰𑍀𑌭𑌾𑌷𑍍𑌯𑌕𑌾𑌰ருடைய 𑌅𑌨𑍁𑌷𑍍𑌠𑌾𑌨த்தாலே 𑌸𑌿𑌦𑍍𑌧ம்.
𑌅𑌧𑍍𑌯𑌾𑌤𑍍𑌮-𑌵𑌿𑌷𑌯த்தில் 𑌪𑍍𑌰𑌧𑌾𑌨-𑌅𑌪𑍍𑌰𑌧𑌾𑌨-𑌅𑌂𑌶ங்களை ஒருவர்க்குப் பலராக 𑌉𑌪𑌦𑍇𑌶𑌿க்க 𑌵𑍇𑌦𑌾𑌨𑍍𑌤ங்களில் பலவிடங்களிலே கண்டோம். ஒர் 𑌆𑌚𑌾𑌰𑍍𑌯ன் பக்கலிலே 𑌕𑍃𑌤𑍍𑌸𑍍𑌨-𑌉𑌪𑌦𑍇𑌶ம் 𑌮𑍈𑌤𑍍𑌰𑍇𑌯𑌾𑌦𑌿களுக்குப் போலே சிலருக்கு உண்டாம். 𑌪𑍍𑌰𑌧𑌾𑌨𑌶𑍍𑌰𑍁𑌤த்தினுடைய 𑌪𑍍𑌰𑌤𑌿𑌷𑍍𑌟𑌾𑌰𑍍𑌥மாகப் பலர் 𑌉𑌪𑌦𑍇𑌶𑌿த்தால் 𑌅𑌲𑍍𑌪𑌂 𑌵𑌾 𑌬𑌹𑍁 𑌵𑌾 𑌯𑌸𑍍𑌯 𑌶𑍍𑌰𑍁𑌤𑌸𑍍𑌯𑍋𑌪𑌕𑌰𑍋𑌤𑌿 𑌯𑌃 । 𑌤𑌮𑌪𑍀𑌹 𑌗𑍁𑌰𑍁𑌂 𑌵𑌿𑌦𑍍𑌯𑌾𑌤𑍍 𑌶𑍍𑌰𑍁𑌤𑍋𑌪𑌕𑍍𑌰𑌿𑌯𑌯𑌾 𑌤𑌯𑌾 ॥ என்கையாலே அவர்கள் பக்கலிலும் 𑌆𑌚𑌾𑌰𑍍𑌯-𑌪𑍍𑌰𑌤𑌿𑌪𑌤𑍍𑌤𑌿 பண்ண 𑌪𑍍𑌰𑌾𑌪𑍍𑌤ம். 𑌅𑌵𑍍𑌯𑌵𑌹𑌿𑌤-𑌮𑍋𑌕𑍍𑌷𑍋𑌪𑌾𑌯-𑌵𑍍𑌯𑌵𑌸𑌾𑌯ம் பிறப்பிக்கை 𑌪𑍍𑌰𑌧𑌾𑌨-𑌆𑌚𑌾𑌰𑍍𑌯-𑌕𑍃𑌤𑍍𑌯ம். இது கலங்காதபடி பண்ணுகையும், 𑌪𑌰𑌿𑌕𑌰-𑌪𑍂𑌰𑍍𑌤𑌿யுண்டாக்குகையும் 𑌆𑌚𑌾𑌰𑍍𑌯-𑌅𑌭𑌿𑌮𑌤-𑌶𑌿𑌕𑍍𑌷𑌕𑌾𑌨𑍍𑌤𑌰-𑌕𑍃𑌤𑍍𑌯ம். 𑌆𑌚𑌾𑌰𑍍𑌯𑌸𑌂𑌬𑌨𑍍𑌧த்தை உண்டாக்கினவர்களும் 𑌪𑍍𑌰𑌬𑌨𑍍𑌧-𑌮𑍁𑌖த்தாலே 𑌪𑌰𑌮𑍍𑌪𑌰𑌯𑌾 𑌉𑌪𑌕𑌰𑌿த்தவர்களும் 𑌆𑌦𑌰𑌣𑍀𑌯ர். இவர்களில் 𑌪𑍍𑌰𑌧𑌾𑌨𑌤𑌮ன் 𑌸𑌰𑍍𑌵-𑌪𑍍𑌰𑍇𑌰𑌕னான 𑌶𑍍𑌰𑌿𑌯𑌃𑌪𑌤𑌿. இவனொருவனே தனக்கோர் 𑌆𑌚𑌾𑌰𑍍𑌯னில்லாத 𑌪𑌰𑌮𑌾𑌚𑌾𑌰𑍍𑌯ன்.
𑌶𑍍𑌰𑍀𑌭𑌾𑌷𑍍𑌯𑌕𑌾𑌰ருடைய 𑌶𑌿𑌷𑍍𑌯-𑌸𑌮𑍍𑌪𑍍𑌰𑌦𑌾𑌯ங்களில் ஒன்றிலும் 𑌅𑌰𑍍𑌥𑌵𑌿𑌰𑍋𑌧மில்லை. 𑌵𑌾𑌕𑍍𑌯𑌯𑍋𑌜𑌨𑌾𑌭𑍇𑌦மே உள்ளது. 𑌦𑍇𑌶-𑌕𑌾𑌲-𑌅𑌵𑌸𑍍𑌥𑌾-𑌵𑌿𑌶𑍇𑌷ங்களாலே வரும் 𑌅𑌨𑍁𑌷𑍍𑌠𑌾𑌨-𑌵𑍈𑌷𑌮𑍍𑌯ம் 𑌶𑌾𑌸𑍍𑌤𑍍𑌰-𑌅𑌨𑍁𑌮𑌤ம். 𑌚𑍋𑌰𑌾𑌪𑌰𑌾𑌧த்தை 𑌮𑌾𑌣𑍍𑌡𑌵𑍍𑌯ன் பக்கல் 𑌆𑌰𑍋𑌪𑌿த்தாற் போல 𑌸𑍍𑌵𑍇𑌚𑍍𑌛𑍈க்கு 𑌅𑌨𑍁𑌗𑍁𑌣மாக 𑌅𑌨𑌿𑌪𑍁𑌣ர் சொல்லுமது 𑌵𑌕𑍍𑌤𑌾க்களுக்கே 𑌦𑍋𑌷மாம்.
திருமந்திரப்பொருளில் முரண்பாடின்மையும் மூன்றுவகையில் 𑌅𑌰𑍍𑌥-𑌪𑌞𑍍𑌚𑌕மும் முதலியன
திருமந்திரத்தில் 𑌪𑌦𑌾𑌰𑍍𑌥-𑌵𑌾𑌕𑍍𑌯𑌾𑌰𑍍𑌥ங்களெல்லாம் 𑌮𑍂𑌲𑌭𑍂𑌤-𑌨𑌿𑌰𑍁𑌕𑍍𑌤𑌾𑌦𑌿-𑌵𑌾𑌕𑍍𑌯-𑌵𑌿𑌶𑍇𑌷ங்களாலே வந்தவை. இதில் 𑌪𑌦𑌤𑍍𑌰𑌯த்திலுமாகவாதல் 𑌪𑍍𑌰𑌥𑌮-𑌪𑌦த்திலேயாதல் 𑌪𑍍𑌰𑌥𑌮-𑌅𑌕𑍍𑌷𑌰த்திலேயாதல் 𑌸𑌙𑍍𑌕𑍍𑌷𑍇𑌪-𑌵𑌿𑌸𑍍𑌤𑌰-𑌕𑍍𑌰𑌮த்தாலே 𑌶𑌬𑍍𑌦-𑌅𑌰𑍍𑌥-𑌸𑍍𑌵𑌭𑌾𑌵ங்களைக் கொண்டு 𑌅𑌰𑍍𑌥𑌪𑌞𑍍𑌚𑌕-𑌅𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌾𑌨ம் பண்ணுமதுவும் 𑌅𑌨𑍍𑌯𑍋𑌨𑍍𑌯-𑌵𑌿𑌰𑍁𑌦𑍍𑌧மன்று. இப்படி 𑌪𑍍𑌰𑌥𑌮-𑌦𑍍𑌵𑌿𑌤𑍀𑌯-𑌅𑌕𑍍𑌷𑌰ங்களாலே 𑌆𑌰𑍍𑌥மாகவாதல் 𑌶𑌾𑌬𑍍𑌦மாகவாதல் 𑌶𑌰𑌣𑍍𑌯-𑌸𑌹𑌧𑌰𑍍𑌮𑌚𑌾𑌰𑌿𑌣𑍀-𑌪𑍍𑌰𑌤𑌿𑌪𑌾𑌦𑌨ம் பண்ணுமதுவும் அவ்வோ 𑌵𑌾𑌕𑍍𑌯-𑌵𑌿𑌶𑍇𑌷-𑌮𑍂𑌲ம். 𑌮𑌧𑍍𑌯𑌮 𑌅𑌕𑍍𑌷𑌰ம் 𑌪𑌤𑍍𑌨𑍀𑌪𑌰மென்னும் 𑌨𑌿𑌰𑍍𑌵𑌾𑌹த்தில் 𑌵𑌿𑌶𑍇𑌷-𑌉𑌪𑌾𑌦𑌾𑌨-𑌬𑌲த்தாலே 𑌅𑌵𑌧𑌾𑌰𑌣ம் 𑌅𑌰𑍍𑌥𑌸𑌿𑌦𑍍𑌧ம். இந்த 𑌅𑌵𑌧𑌾𑌰𑌣த்தாலே 𑌶𑌰𑍀𑌰-𑌆𑌤𑍍𑌮-𑌭𑌾𑌵ம் 𑌸𑌿𑌦𑍍𑌧𑌿க்கிறதென்பார்க்கு 𑌶𑍇𑌷𑌤𑍍𑌵-𑌅𑌯𑍋𑌗-𑌵𑍍𑌯𑌵𑌚𑍍𑌛𑍇𑌦த்திலே 𑌤𑌾𑌤𑍍𑌪𑌰𑍍𑌯ம் கொள்ளலாம். 𑌮𑌕𑌾𑌰𑌾𑌰𑍍𑌥𑍋 𑌜𑍀𑌵𑌃 𑌇𑌤𑍍𑌯𑌾𑌦𑌿களிற் படியே 𑌤𑍃𑌤𑍀𑌯𑌾𑌕𑍍𑌷𑌰ம் 𑌜𑍀𑌵𑌜𑌾𑌤𑍀𑌯 𑌸𑌰𑍍𑌵𑌪𑌰மென்பார்க்கும் இதில் 𑌸𑍍𑌵𑌾𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌾𑌨ம் 𑌆𑌰𑍍𑌥மென்ன வேண்டும். 𑌅𑌕𑌾𑌰𑌾𑌰𑍍𑌥𑌾𑌯𑍈𑌵 𑌸𑍍𑌵𑌮𑌹𑌮𑍍 என்று 𑌵𑌿𑌶𑍇𑌷𑌿த்து 𑌵𑍍𑌯𑌾𑌖𑍍𑌯𑌾𑌨ம் பண்ணினவர்களுக்கும் இவ்வ𑌨𑍁𑌸𑌂𑌧𑌾𑌨ம் 𑌸𑌰𑍍𑌵-𑌜𑍀𑌵-𑌸𑌾𑌧𑌾𑌰𑌣-𑌆𑌕𑌾𑌰𑌵𑌿𑌷𑌯ம். 𑌭𑌗𑌵𑌤𑍍-𑌶𑍇𑌷𑌤𑍍𑌵ம் தோற்றுமிடமெல்லாம் 𑌭𑌾𑌗𑌵𑌤-𑌶𑍇𑌷𑌤𑍍𑌵-𑌪𑌰𑍍𑌯𑌨𑍍𑌤மாக 𑌅𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌿க்க 𑌪𑍍𑌰𑌾𑌪𑍍𑌤மாயிருக்க, 𑌔𑌚𑌿𑌤𑍍𑌯-𑌅𑌤𑌿𑌶𑌯த்தாலே 𑌮𑌧𑍍𑌯𑌮𑌪𑌦த்திலே இத்தை 𑌅𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌿க்குமது 𑌉𑌪𑌪𑌨𑍍𑌨ம். 𑌪𑍍𑌰𑌥𑌮-𑌦𑍍𑌵𑌿𑌤𑍀𑌯-𑌚𑌤𑍁𑌰𑍍𑌥𑌿களுக்கு 𑌏𑌕𑌾𑌰𑍍𑌥𑌤𑍍𑌵-𑌭𑌿𑌨𑍍𑌨𑌾𑌰𑍍𑌥𑌤𑍍𑌵ங்களும் 𑌪𑍍𑌰𑌮𑌾𑌣-𑌅𑌨𑍁𑌗𑍁𑌣-𑌵𑌾𑌕𑍍𑌯𑌾𑌰𑍍𑌥-𑌵𑌿𑌵𑌕𑍍𑌷𑌾-𑌭𑍇𑌦த்தாலே சொன்னவை.
“த்வயம்” மந்த்ர பொருள் விளக்கம்
𑌦𑍍𑌵𑌯த்தில் 𑌪𑍂𑌰𑍍𑌵-𑌅𑌪𑌰-𑌶𑍍𑌰𑍀𑌮𑌚𑍍𑌛𑌬𑍍𑌦ங்களிலும், 𑌪𑍂𑌰𑍍𑌵-𑌅𑌪𑌰-𑌨𑌾𑌰𑌾𑌯𑌣 𑌶𑌬𑍍𑌦ங்களிலும், சில 𑌆𑌕𑌾𑌰-𑌵𑌿𑌶𑍇𑌷ங்களைப் பிரித்து 𑌅𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌿க்குமது 𑌉𑌪𑌾𑌯-𑌫𑌲-𑌦𑌶𑍈களுக்கு 𑌉𑌪𑌯𑍁𑌕𑍍𑌤𑌤𑌮-𑌅𑌂𑌶𑌨𑌿𑌷𑍍𑌕𑌰𑍍𑌷ம் பண்ணினபடி. 𑌚𑌰𑌣ங்களை 𑌉𑌪𑌾𑌯மென்கிறதற்கு 𑌚𑌰𑌣-𑌵𑌿𑌶𑌿𑌷𑍍𑌟-𑌵𑌶𑍀𑌕𑌾𑌰𑍍𑌯ன் பக்கலிலே 𑌤𑌾𑌤𑍍𑌪𑌰𑍍𑌯-மாகையாலே 𑌸𑌿𑌦𑍍𑌧𑍋𑌪𑌾𑌯-𑌭𑍇𑌦மும் 𑌸𑌾𑌧𑍍𑌯𑍋𑌪𑌾𑌯-𑌬𑌾𑌧மும் வாரா. 𑌨𑌮𑌸𑍍ஸு 𑌨𑌾𑌨𑌾𑌰𑍍𑌥மாக 𑌅𑌹𑌿𑌰𑍍𑌬𑍁𑌧𑍍𑌨𑍍𑌯-𑌸𑌂𑌹𑌿𑌤𑌾𑌦𑌿களில் 𑌨𑌿𑌰𑍁𑌕𑍍𑌤மாகையாலே 𑌪𑍍𑌰𑌥𑌮-𑌦𑍍𑌵𑌿𑌤𑍀𑌯-𑌰𑌹𑌸𑍍𑌯ங்களில் 𑌮𑌧𑍍𑌯𑌮-𑌚𑌰𑌮-𑌪𑌦ங்களுக்கு 𑌵𑌾𑌕𑍍𑌯𑌾𑌰𑍍𑌥-𑌅𑌨𑍁𑌗𑍁𑌣மாக 𑌅𑌰𑍍𑌥𑌭𑍇𑌦ம் கொள்ளலாம். 𑌦𑍍𑌵𑌿𑌤𑍀𑌯-𑌤𑍃𑌤𑍀𑌯-𑌰𑌹𑌸𑍍𑌯ங்களில் கிடக்கிற 𑌶𑌰𑌣𑌶𑌬𑍍𑌦ம் 𑌉𑌪𑌾𑌯𑌪𑌰மானதடியாக 𑌵𑌶𑍀𑌕𑌰𑌣-𑌉𑌪𑌾𑌯த்துக்குச் சிலர் பண்ணும் 𑌅𑌤𑌿𑌵𑌾𑌦மெல்லாம் 𑌸𑌿𑌦𑍍𑌧𑍋𑌪𑌾𑌯-𑌪𑍍𑌰𑌾𑌧𑌾𑌨𑍍𑌯𑌪𑌰ம். 𑌸𑍍𑌵𑌾𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌾𑌨-𑌪𑌰மாயும் 𑌵𑌿𑌧𑌿𑌪𑌰மாயும் நிற்கிற 𑌆𑌖𑍍𑌯𑌾𑌤ங்களில் 𑌆𑌵𑍃𑌤𑍍𑌤𑌿க்கு 𑌜𑍍𑌞𑌾𑌪𑌕மில்லாமையாலும், 𑌅𑌨𑌾𑌵𑍃𑌤𑍍𑌤𑌿க்குக் 𑌕𑌣𑍍𑌠𑍋𑌕𑍍𑌤𑌿யுண்டாகையாலும் 𑌵𑌰𑍍𑌤𑌮𑌾𑌨-𑌵𑍍𑌯𑌪𑌦𑍇𑌶ம் 𑌅𑌨𑍁𑌷𑍍𑌠𑌾𑌨𑌕𑌾𑌲-𑌅𑌭𑌿𑌪𑍍𑌰𑌾𑌯ம். 𑌪𑍍𑌰𑌪𑌤𑍍𑌤𑌿க்கு 𑌯𑌾𑌵𑌜𑍍𑌜𑍀𑌵-𑌅𑌨𑍁𑌵𑍃𑌤𑍍𑌤𑌿 சொல்லுவார்க்கும் 𑌦𑍍𑌵𑌯𑌮𑌰𑍍𑌥𑌾𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌾𑌨𑍇𑌨 𑌸𑌹 𑌸𑌦𑍈𑌵𑌂 𑌵𑌕𑍍𑌤𑌾 𑌇𑌤𑍍𑌯𑌾𑌦𑌿களிற் சொன்ன 𑌸𑍁𑌖𑌾𑌸𑌿 கையிலே 𑌤𑌾𑌤𑍍𑌪𑌰𑍍𑌯ம் கொள்ளலாம். 𑌨𑍍𑌯𑌾𑌸𑌃 𑌪𑌞𑍍𑌚𑌾𑌙𑍍𑌗𑌸𑌂𑌯𑍁𑌤𑌃 என்று சொன்ன 𑌪𑍍𑌰𑌪𑌤𑍍𑌤𑌿-𑌅𑌂𑌗ங்களிலே சிலர் 𑌕𑌤𑌿𑌪𑌯-𑌅𑌨𑌾𑌦𑌰ம் பண்ணுமது 𑌅𑌙𑍍𑌗𑌿யுனுடைய 𑌵𑍈𑌭𑌵𑌾𑌰𑍍𑌥ம். 𑌵𑌿𑌶𑍇𑌷𑌿த்துக் 𑌕𑌤𑌿𑌪𑌯-𑌅𑌙𑍍𑌗-𑌉𑌪𑌾𑌦𑌾𑌨ம் பண்ணுமதுவும் 𑌅𑌙𑍍𑌗𑌾𑌨𑍍𑌤𑌰ங்களிற் காட்டில் இவ்𑌵𑌂𑌗ங்களுடைய 𑌪𑍍𑌰𑌶𑌂𑌸𑌾𑌰𑍍𑌥ம்.
𑌸𑌰𑍍𑌵𑌧𑌰𑍍𑌮𑌾𑌨𑍍 𑌪𑌰𑌿𑌤𑍍𑌯𑌜𑍍𑌯 முதலிய 𑌚𑌰𑌮𑌶𑍍𑌲𑍋𑌕 விளக்கம்
𑌚𑌰𑌮𑌶𑍍𑌲𑍋𑌕த்தில் 𑌵𑌿𑌧𑌿க்கிற 𑌪𑍍𑌰𑌪𑌤𑍍𑌤𑌿 𑌸𑌕𑌲-𑌫𑌲-𑌸𑌾𑌧𑌨மாகையாலே 𑌅𑌂𑌗மாகவும் 𑌸𑍍𑌵𑌤𑌨𑍍𑌤𑍍𑌰மாகவும் 𑌵𑍍𑌯𑌾𑌖𑍍𑌯𑌾𑌨ம் பண்ணின 𑌭𑌾𑌷𑍍𑌯-𑌗𑌦𑍍𑌯ங்களுக்கு 𑌵𑌿𑌰𑍋𑌧மில்லை. 𑌸𑌰𑍍𑌵-𑌧𑌰𑍍𑌮-𑌶𑌬𑍍𑌦த்தில் 𑌸𑌂𑌕𑍁𑌚𑌿𑌤-𑌅𑌸𑌂𑌕𑍁𑌚𑌿𑌤-𑌵𑍃𑌤𑍍𑌤𑌿களைக் கொள்ளுமவர்களுக்குப் 𑌪𑌰𑌪𑌕𑍍𑌷த்திற்போலே 𑌸𑌰𑍍𑌵-𑌧𑌰𑍍𑌮-𑌸𑍍𑌵𑌰𑍂𑌪-𑌤𑍍𑌯𑌾𑌗-𑌵𑌿𑌧𑌿-𑌵𑌿𑌵𑌕𑍍𑌷𑍈யில்லாமையாலே 𑌸𑍍𑌵𑌤𑌨𑍍𑌤𑍍𑌰-𑌆𑌜𑍍𑌞𑌾-𑌅𑌨𑍁𑌪𑌾𑌲𑌨-𑌵𑌿𑌰𑍋𑌧மில்லை. 𑌪𑌰𑌿𑌤𑍍𑌯𑌜𑍍𑌯𑌶𑌬𑍍𑌦த்திலும் 𑌏𑌕𑌶𑌬𑍍𑌦த்திலும் 𑌮𑍂𑌲𑌪𑍍𑌰𑌮𑌾𑌣-𑌅𑌨𑍁𑌗𑍁𑌣மாகச் சொல்லும் பல 𑌅𑌰𑍍𑌥ங்களிலும் 𑌪𑌰𑌸𑍍𑌪𑌰𑌵𑌿𑌰𑍋𑌧மில்லை. அவற்றில் 𑌪𑍁𑌨𑌰𑍁𑌕𑍍𑌤𑌿 வாராதபடி 𑌅𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌿க்குமதே வேண்டுவது. 𑌶𑌰𑌣𑍍𑌯னுக்கு 𑌪𑍍𑌰𑌪𑌤𑍍𑌤𑌿-𑌕𑌰𑍍𑌮𑌤𑍍𑌵த்தையும் 𑌮𑍋𑌕𑍍𑌷-𑌕𑌰𑍍𑌤𑍃𑌤𑍍𑌵த்தையும் 𑌪𑍍𑌰𑌤𑌿𑌪𑌾𑌦𑌿க்கிற 𑌮𑌾𑌮𑍍-𑌅𑌹𑌮𑍍 என்கிற 𑌪𑌦ங்களிலே 𑌸𑌰𑍍𑌵𑌸𑍍𑌵𑍀𑌕𑌾𑌰-𑌉𑌪𑌯𑍁𑌕𑍍𑌤மான 𑌸𑍗𑌲𑌭𑍍𑌯மும் 𑌸𑌰𑍍𑌵-𑌕𑌾𑌰𑍍𑌯-𑌕𑌰𑌤𑍍𑌵-𑌉𑌪𑌯𑍁𑌕𑍍𑌤மான 𑌪𑌰𑌤𑍍𑌵மும் 𑌅𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌿க்குமிடத்தில் 𑌅𑌪𑍇𑌕𑍍𑌷𑌿𑌤-𑌵𑌿𑌶𑍇𑌷ங்களைப் பிரித்து 𑌅𑌨𑍁𑌸𑌨𑍍𑌧𑌿க்குமது 𑌶𑍇𑌷𑌵𑍍𑌯𑌵𑌚𑍍𑌛𑍇𑌦𑌾𑌰𑍍𑌥மன்று. “𑌵𑍍𑌰𑌜” என்றும் “𑌤𑍍𑌵𑌾” என்றும் 𑌅𑌰𑍍𑌜𑍁𑌨னை ஒருவனைக் குறித்துச் சொன்னாலும் 𑌤𑌾𑌤𑍍𑌪𑌰𑍍𑌯-𑌵𑌿𑌶𑍇𑌷த்தாலே இது 𑌪𑍍𑌰𑌪𑌤𑍍𑌤𑌿-𑌅𑌧𑌿𑌕𑌾𑌰𑌿களெல்லாருக்கும் வரும். 𑌸𑌰𑍍𑌵-𑌪𑌾𑌪-𑌮𑍋𑌕𑍍𑌷-𑌵𑌚𑌨த்தில் 𑌬𑍁𑌦𑍍𑌧𑌿𑌪𑍂𑌰𑍍𑌵-𑌉𑌤𑍍𑌤𑌰𑌾𑌘த்தையும் கூட்டுவார்க்கு 𑌶𑌰𑌣𑍍𑌯-𑌅𑌭𑌿𑌪𑍍𑌰𑌾𑌯𑌮𑍂𑌲-𑌪𑍁𑌨:-𑌪𑍍𑌰𑌪𑌦𑌨𑌾𑌦𑌿-𑌮𑍁𑌖த்தாலே அவைகளுக்கு 𑌵𑌿𑌨𑌾𑌶ம் 𑌵𑌿𑌵𑌕𑍍𑌷𑌿𑌤மாகையால் 𑌶𑌾𑌸𑍍𑌤𑍍𑌰𑌵𑌿𑌰𑍋𑌧மில்லை. “𑌮𑍋𑌕𑍍𑌷𑌯𑌿𑌷𑍍𑌯𑌾𑌮𑌿” என்கிற 𑌸𑌂𑌕𑌲𑍍𑌪த்தின் 𑌫𑌲ம் 𑌪𑍍𑌰𑌾𑌰𑌬𑍍𑌧-𑌕𑌰𑍍𑌮-𑌅𑌵𑌸𑌾𑌨த்திலே என்றவர்களுக்கும் 𑌪𑍍𑌰𑌪𑌤𑍍𑌤𑌿 பண்ணுகிறவன் கோரின காலத்திலே என்றவர்களுக்கும் 𑌆𑌰𑍍𑌤𑍍𑌤𑌿யில் 𑌤𑌾𑌰𑌤𑌮𑍍𑌯த்திற்கு ஈடாக 𑌫𑌲-𑌅𑌨𑍁𑌭𑌵த்தாலேயாதல் 𑌪𑍍𑌰𑌪𑌤𑍍𑌤𑌿-𑌵𑍈𑌭𑌵த்தாலேயாதல் 𑌪𑍍𑌰𑌾𑌰𑌬𑍍𑌧-𑌕𑌰𑍍𑌮-𑌅𑌵𑌸𑌾𑌨த்திலே 𑌮𑍋𑌕𑍍𑌷ம் 𑌤𑍁𑌲𑍍𑌯ம். 𑌅𑌰𑍍𑌜𑍁𑌨னுக்கு 𑌶𑍋𑌕𑌨𑌿𑌮𑌿𑌤𑍍𑌤ம் வேறேயாகிலும் 𑌮𑌾 𑌶𑍁𑌚𑌃 𑌸𑌂𑌪𑌦𑌂 𑌦𑍈𑌵𑍀𑌮𑍍 என்கிறவிடத்திற்போலே 𑌮𑍋𑌕𑍍𑌷𑌯𑌿𑌷𑍍𑌯𑌾𑌮𑌿 𑌮𑌾 𑌶𑍁𑌚𑌃 என்ற இடத்திலும் 𑌪𑍍𑌰𑌕𑌰𑌣-𑌅𑌨𑍁𑌗𑍁𑌣-𑌨𑌿𑌮𑌿𑌤𑍍𑌤-𑌵𑌿𑌶𑍇𑌷-𑌅𑌨𑍁𑌸𑌂𑌧𑌾𑌨ம் 𑌉𑌚𑌿𑌤ம்.
மற்றும் இப்படி 𑌵𑍇𑌦𑌾𑌨𑍍𑌤-𑌸𑌿𑌦𑍍𑌧ங்களான 𑌤𑌤𑍍𑌵-𑌹𑌿𑌤-𑌪𑍁𑌰𑍁𑌷𑌾𑌰𑍍𑌥ங்களில் 𑌪𑌰𑌸𑍍𑌪𑌰-𑌵𑌿𑌰𑍋𑌧மும் 𑌪𑍂𑌰𑍍𑌵-𑌅𑌪𑌰-𑌵𑌿𑌰𑍋𑌧மும் இல்லாத 𑌶𑍁𑌦𑍍𑌧-𑌸𑌂𑌪𑍍𑌰𑌦𑌾𑌯-𑌕𑍍𑌰𑌮த்தை 𑌸𑌂𑌗𑍍𑌰𑌹𑌿த்தனம். 𑌸𑍁𑌵𑍍𑌯𑌾𑌹𑍃𑌤𑌾𑌨𑌿 𑌮𑌹𑌤𑌾𑌮𑍍 𑌇𑌤𑍍𑌯𑌾𑌦𑌿களையும் இங்கே 𑌸𑌂𑌗𑍍𑌰𑌹𑌿த்துக் கொள்வது.
கடலமுதத்தைக் கடைந்து சேர்த்த
திருமாலடி காட்டிய நம்
தேசிகர் தம் நிலை பற்றிச் சேர்ந்தோமே. (2)
𑌆𑌸𑌰𑍍𑌵𑌜𑍍𑌞𑌾𑌦𑌸𑍍𑌮𑌦𑌾𑌚𑌾𑌰𑍍𑌯-𑌪𑌙𑍍𑌕𑍍𑌤𑍇𑌃 𑌅𑌪𑍍𑌰𑌤𑍍𑌯𑍂𑌹𑌂 𑌸𑌤𑍍𑌪𑌥𑌂 𑌸𑍍𑌥𑌾𑌪𑌯𑌨𑍍𑌤𑍀 ।
𑌸𑍈𑌷𑌾 𑌨𑌿𑌤𑍍𑌯𑌂 𑌸𑌂𑌪𑍍𑌰𑌦𑌾𑌯𑌸𑍍𑌯 𑌶𑍁𑌦𑍍𑌧𑌿𑌃 𑌶𑍍𑌰𑌦𑍍𑌧𑌾𑌤𑌵𑍍𑌯𑌾 𑌚𑌾𑌤𑌕𑌨𑍍𑌯𑌾𑌯𑌨𑌿𑌷𑍍𑌠𑍈𑌃 ॥
𑌇𑌤𑌿 𑌶𑍍𑌰𑍀𑌕𑌵𑌿𑌤𑌾𑌰𑍍𑌕𑌿𑌕𑌸𑌿𑌂𑌹𑌸𑍍𑌯 𑌸𑌰𑍍𑌵𑌤𑌨𑍍𑌤𑍍𑌰𑌸𑍍𑌵𑌤𑌨𑍍𑌤𑍍𑌰𑌸𑍍𑌯 𑌶𑍍𑌰𑍀𑌮𑌦𑍍𑌵𑍇𑌙𑍍𑌕𑌟𑌨𑌾𑌥𑌸𑍍𑌯 𑌵𑍇𑌦𑌾𑌨𑍍𑌤𑌾𑌚𑌾𑌰𑍍𑌯𑌸𑍍𑌯 𑌕𑍃𑌤𑌿𑌷𑍁 𑌶𑍍𑌰𑍀𑌸𑌂𑌪𑍍𑌰𑌦𑌾𑌯𑌪𑌰𑌿𑌶𑍁𑌦𑍍𑌧𑌿𑌃 𑌸𑌮𑌾𑌪𑍍𑌤𑌮𑍍 ।
𑌶𑍍𑌰𑍀𑌸𑌮𑍍𑌪𑍍𑌰𑌦𑌾𑌯-𑌪𑌰𑌿𑌶𑍁𑌦𑍍𑌧𑌿 முற்றும்.
𑌕𑌵𑌿𑌤𑌾𑌰𑍍𑌕𑌿𑌕𑌸𑌿𑌂𑌹𑌾𑌯 𑌕𑌲𑍍𑌯𑌾𑌣𑌗𑍁𑌣𑌶𑌾𑌲𑌿𑌨𑍇 ।
𑌶𑍍𑌰𑍀𑌮𑌤𑍇 𑌵𑍇𑌙𑍍𑌕𑌟𑍇𑌶𑌾𑌯 𑌵𑍇𑌦𑌾𑌨𑍍𑌤𑌗𑍁𑌰𑌵𑍇 𑌨𑌮𑌃 ॥
𑌶𑍍𑌰𑍀𑌮𑌤𑍇 𑌨𑌿𑌗𑌮𑌾𑌨𑍍𑌤𑌮𑌹𑌾𑌦𑍇𑌶𑌿𑌕𑌾𑌯 𑌨𑌮𑌃