Text input by Subhadra Sanath
- அடுப்பிடுகல் என்றேனோ எம்பாரை போலே?
- அவரோ நீர்? எனக்கேட்டேனோ மணற்பாக்கத்தாரைப் போலே?
- ஆரோக்யம் வேண்டினேனோ பின்பழகியார் போலே?
- உசாத்துனையாய்ச் சென்றேனோ ஆழ்வானைப் போலே?
- உமிழ்ந்திகழ்ந்தேனோ கூரகுலோத்தமர்போலோ?
- உடன்சென்றுயிர் நீத்தேனோ உலகாரியனைப்போலே?
- மழையில் நின்றேனோ எம்பெருமானாரைப்போலே?
- மகனைக்கூவி மாதவனைக்கண்டேனோ அம்மையார் போலே?
- மனையாளை விட்டேனோ வில்லியாரைப்போலே?
- வெள்ளாட்டியானேனோ ஆண்டானைப்போலே?
- இருகரையரென்றேனோ வடுகரைப்போலே?
- இடைச்சிகளிடையே நின்றேனோ வங்கிப்புத்தாரைப் போலே?
- இடைகழியிலிருந்தேனோ திருக்கண்ணமங்கையாண்டான் போலே?
- ஈட்டைப்பெருக்கினேனோ பெரிய ஜீயரைப்போலே?
- ஈரவாடையால் கண்டேனோ ஈரங்கொல்லியைப் போலே?
- உம்மைப்போலேயென்றேனோ அநந்தாழ்வான் போலே?
- உலகாரியனோ என உரைத்தேனோ தோழப்பரைப் போலே?
- சென்றுவா என்றேனோ சுமித்திரையாரைப்போலே?
- செண்பகமிட்டேனோ ராஜகுமாரனைப்போலே?
- நாடுபுகுவீரென்றேனோ ஆண்டாளைப்போலே?
- வேண்டுவதிதேயென்றேனோ பட்டரைப்போலே?
- பங்குகொள்ளுமென்றேனோ பண்டாரத்தைப் போலே?
- மூர்ச்சித்து விழுந்தேனோ வண்டரைப் போலே?
- எழுப்பிவிட்டேனோ உறங்காவில்லிபோல?
- ஒருகோல்துறை பெற்றேனோ அம்மையாரைப்போலே?
- பின்னே குளித்தேனோ அப்பாவைப்போலே?
- புடவையால் துடைத்தேனோ ஆச்சியாரைப் போலே?
- அந்தரங்கங்கண்டேனோ கொற்றியைப் போலே?
- ஒளிந்து கொள்ளுமென்றேனோ அசடனைப்போலே?
- வாட்டியருள் பெற்றேனோ வண்ணாத்தான் போலே?
- முதல்வனைப் பெற்றேனோ கௌஸலையார் போலே?
- பொன்வட்டிலை யெறிந்தேனோ ஆழ்வானைப்போலே?
- கைதூக்கிக் காட்டினேனோ எம்பாரைப்போலே?
- பட்டோலை கொண்டேனோ பிள்ளையைப்போலே?
- வந்தேறி என்றேனோ அநந்தாழ்வான் போலே?
- துடையில் தாங்கினேனோ நஞ்சீயரைப்போலே?
- கோல் வேண்டாமென்றேனோ ஜீயரைப் போலே?
- பாதுகமாகப் பெற்றேனோ தாசரதியைப் போலே?
- பவித்திரமெனப்பெற்றேனோ ஆழ்வானைப்போலே?
- சேற்றில் படுத்தேனோ மணக்கால் நம்பியைப் போலே?
- காடுவெட்டிக் கண்டேனோ திருமலையாழ்வார் போலே?
- ப்ராவண்யமுடையேனோ நாயனாரைப்போலே?
- தகப்பனை கர்ஹித்தேனோ அநந்தரத்திலவன் போலே?
- சதகம்பாடி நோய் கெடுத்தேனோ கூரநாராயணர் போல?
- கைச்செம்பைப்பெற்றேனோ அண்ணாவைப்போலே?
- வாரி எடுத்தேனோ கிடாம்பியாச்சானைப்போலே?
- மூத்தபின் கற்றேனோ வாதிகேஸரியைப் போலே?
- முகம்மாறிக்காட்டினேனோ எம்பாரைப்போலே?
- குறட்டிலிருந்து காத்தேனோ ஆண்டானைப்போலே?
- குடிநீரருந்தக்கொடுத்தேனோ உடையவரைப்போலே?
- பணிகொள்ளப்பெற்றேனோ கிடாம்பியாச்சான் போலே?
- நிதிபெற்றுவந்தேனோ ஆழ்வானைப்போலே?
- பெற்றவரைப் பேணினேனோ தர்மவ்யாதனைப்போலே?
- பலவுருவங்கொண்டேனோ ஸௌபரியைப்போலே?
- நீர் தானம் செய்தேனோ ரந்தி தேவரைப் போலே?
- சாக்ஷியானேனோ மார்க்கண்டேயனைப்போலே?
- எல்லாமுமானேனோ கௌசலையார் போலே?
- யான்வேண்டேன் என்றேனோ ஆழ்வாரைப் போலே?
- பரதனுக்குச் சொன்னேனோ குகப்பெருமாள் போலே?
- பேராயிரம் சொன்னேனோ பீஷ்மரைப்போலே?
- பிண்ணாக்கையிட்டேனோ பெருமாளைப்போலே?
- தண்ணீர் கொடேனென்றேனோ திருமலைநம்பியைப் போல?
- ஆடக்கண்டேனோ சோமாசியாண்டானைப்போலே?
- ரக்ஷையிட்டேனோ எம்பாரைப் போலே?
- திருநாமமிட்டேனோ வண்ணாத்தான் போலே?
- கண்டு மோஹித்தேனோ திருப்பாவை ஜீயரைப்போலே?
- மோதிரமீந்தேனோ பட்டரைப்போலே?
- திருமேனி காத்தேனோ கொடவரைப்போலே?
- சரிவிலிழிந்தேனே தோழப்பரைப்போலே?
- பாதுகைபேணிப் பொருள் கண்டேனோ எம்பாரைப்போலே?
- பேயை ஒட்டினேனோ இளையாழ்வாரைப் போலே?
- வார்த்தையொன்று சொன்னேனோ த்ரிபுராதேவியார் போலே?
- தாய்விழியாககாதென்றேனோ பட்டரைப்போலே?
- தவறாதாரேதென்றேனோ பிராட்டியாரைப் போலே?
- நாவகாரியமாக்கினேனோ வடுகரைப்போலே?
- காலலம்பிவந்தேனோ ஆண்டானைப்போலே?
- தினைமாவைக்கொடுத்தேனோ வேடரைப்போலே?
- அவனுக்காக அழுதேனோ ஆண்டாளைப்போலே?
- தெருமண்ணையேற்றேனோ ஜீயரைப்போலே?
- கடப்பாரையாலடித்தேனோ அந்தாழ்வானைப் போலே?
- அடியில்கேட்டே அறிய வேண்டுமென்றேனோ பெற்றியைப்போல?
- துரும்புகண்டு மோஹித்தேனோ ஆயியைப்போலே?
- குடப்பாம்பில் கைவிட்டேனோ கோழியர்கோன்போலே?
- கிழியறுத்து வந்தேனோ பட்டர்பிரான் போலே?
- இருடமலீந்தேனோ கலியனைப்போலே?
- கனவில் மணந்தேனோ நாச்சியாரைப்போலே?
- சிறுவிரலைத்தந்தேனோ மங்கையர்கோன்போலே?
- பெருந்தமிழனானேனோ முதலாழ்வார் போலே?
- காவல் பூண்டேனோ கன்னியைப்போலே?
- பொன்னடி வாழ்த்தினேனோ இனக்குறவர் போலே?
- அநுகாரம் செய்தேனோ ஆழ்வாரைப் போலே?
- மதியை மணிவிளக்காவைப்பன் என்றேனோ யானையைப் போலே?
- என்னினைந்திருந்தீர் என்று கேட்டேனோ தாயைப் போலே?
- கொடுபோகப் போனேனோ சத்ருக்னன் போலே?
- உபதேசம் செய்தேனோ அவன்மகன்போலே?
- உயிர்காத்தாட்செய்தேனோ திருவடியைப் போலே?
- உயிர்காத்திருந்தேனோ பிராட்டியைப்போலே?
- என் மனம் செல்லாதென்றேனோ திருவடியைப் போலே?
- மற்றொன்றுங்காணேனோ பாணரைப்போலே?
- சொல்லென்னச் சொன்னேனோ கட்டுவிச்சிபோலே?
- விலவறச்சிரித்தேனோ அடிப்பொடியார் போலே?
- பொருள் கற்க அழைத்தேனோ நாலுகவியார் போலே?
- அந்தாதி பாடவவல்லேனோ அழகியமணவாளரைப்போலே?
- உமது சந்ததிக்கென்றேனோ மாமுனிகளைப்போலே?
- ஆலாங்கட்டி என்றேனோ நாயனைப்போலே?
- ஆடியூன்றப் பெற்றேனோ தேவராஜரைப்போலே?
- நாலாயிரம் பெற்றேனோ நாதமுனிகளைப்போலே?
- பாட்டனாரைப் பாருமென்றேனோ ஆளவந்தாரைப் போலே?