Text input by Subhadra Sanath.
1. பெண்ணே ! உன்தேசமேது ? நாடேது? நித்யவாஸமேது? என்ன – திருவழுதிவளநாடென்ன
2. ஊரேதென்ன – திருக்குருகூரென்ன
3. வீடேதென்ன – பண்டுடையான் வீடு என்ன
4. குலமேதென்ன – அச்யுதகுலம் என்ன
5. வேதமேதென்ன – திராவிடவேத மென்ன
6. கோத்ரமேதென்ன – பராங்குசகோத்ரமென்ன
7. ஸூத்ரமே தென்ன – ராமாநுஜஸூத்ரமென்ன
8. காரிகையே தென்ன – பரகாலகாரிகையென்ன
9. குடியேதென்ன – அஞ்சுகுடியென்ன
10. பந்துக்களா ரென்ன – ஆத்மபந்துக்களென்ன
11. உறவாரென்ன – ஒட்டவுணர்ந்தவரென்ன
12. உற்றாராரென்ன – உற்றது முன்னடியாரென்ன
13. தகப்பனராரென்ன – தெய்வநாயகனென்ன
14. தாயாராரென்ன – சீவரமங்கையென்ன
15. புக்கவிட மெவ்விடமேதென்ன – வானமாமலையென்ன
16. பர்த்தாவாரென்ன – வரமங்கைமுனிவரென்ன
17. மாமனராரென்ன – காந்தோபயந்ததாவென்ன
18. உத்யோகமே தென்ன – பாகவத கைங்கர்யமென்ன
19. அத்தால்ப்ரயோஜனமேதென்ன – அதுவே ப்ரயோஜமென்ன
20. அதிகாரமேதென்ன – ஸர்வாதிகாரமென்ன
21. நிஷ்டையேதென்ன – பஞ்சமோபாய நிஷ்டையென்ன
22. உபாயமேதென்ன – சரமோபாயமென்ன
23. அபிமான மேதென்ன – பாகவதாபிமான மென்ன
24. ப்ரார்த்தனையேதென்ன – கைங்கர்யப்ரார்த்தனையென்ன.